வி.புதூரில் போதை ஒழிப்பு பேரணி

0
210

தூத்துக்குடி மாவட்டம் வி.புதூர் பேரூராட்சி சார்பில், இந்து நாடார் உயர்நிலை பள்ளியில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு வி.புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் வனிதா முன்னிலை வகித்தார்.பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் போதை இல்லா தமிழ்நாடு உருவாக்கிட
போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார், ஆசிரியர் தங்கராஜ்,பேரூராட்சியின் உதவி துப்புரவு ஆய்வாளர், இளநிலை உதவியாளர், சமுதாய பரப்புரையாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here