தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியில் இருந்து காடுவெட்டி செல்லும் சாலையில் நான்கு சாலை சந்திப்புக்கு முன்பு கடந்த ஆண்டு பொழிந்த கடும் மழை வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவிலான பள்ளம் காணப்பட்டது. சிறிது கவனம் பிசகினாலும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது.
இதுகுறித்து நமது தென்னாடு இணைய இதழில் செய்தி வெளியானதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மிகுந்த கவனம் செலுத்தி சாலை பள்ளத்தை உடனடியாக சீரமைத்தனர்.
அப்பகுதி பொதுமக்களும் அவ்வழி பயணிகளும் நெடுஞ்சாலைத் துறையினருக்கும் தென்னாடு இதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.









