திருவில்லிபுத்தூரில் முககவசம் அணியாத பயணிகள் பேருந்திலிருந்து இறக்கம்

0
774

ஒமிக்ரான் தொற்று பரவலை தொடர்ந்து திருவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். பேருந்துகளில் செல்லும் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

முககவசம் அணியாமல் பேருந்தில் இருந்த பயணிகளை, பேருந்தில் இருந்து அதிகாரிகள் இறக்கி விட்டனர். பின்னர் பயணிகளுக்கு முககவசம் வழங்கியபின் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here