கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

0
298

விளாத்திகுளம்-துளசிபட்டி சாலையில் உள்ள வைப்பாற்றில் அக்கரையில் உள்ள தோட்ட கிணற்றில் மயில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வருவதாக விளாத்திகுளம் தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பாதுகாப்பு உபகரணங்களுடன் உடனடியாக வந்து சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறை அதிகாரிகள் மயிலை பரிசோதனை செய்து மீண்டும் காட்டுப்பகுதிக்குள் பறக்க விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here