என் பெயரை பயன்படுத்தி மோசடி: முன்னாள் அமைச்சர் நிலோபர் புலம்பல்

0
1262

ஊழல் புகாருக்குள்ளான முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வாணியம்பாடியில்செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, *என் பெயரை வைத்து பிரகாசம் என்பவர் தான் பண மோசடி செய்தார். என் மீது ஊழல் புகார் கொடுப்பதற்கு முன்பு என் பெயரை வைத்து பண மோசடி செய்த பிரகாசம் மீது நான் ஏப்ரல் மாதமே திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன் அதை டிஎஸ்பி பிரவீன்குமார் விசாரணை செய்து வருகிறார்.

நான் என் தாய் மற்றும் சகோதரி இறந்த துயரத்தில் இருக்கிறேன். திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் என்னுடைய தாயை இறந்ததற்கு ஆறுதல் கூற தான் வந்தார். *அதிமுக கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பாக என்னுடைய உறவினர் ஒருவரிடம் தலைமைக்கு கட்சியில் இருந்து விலகுவதாக கடிதத்தை அனுப்பினேன். ஆனால் தற்போது அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது மிகவும் சந்தோஷம் தான்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here