கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அமர் சேவா சங்கம் ஆய்க்குடி மாபெரும் மாற்றுத்திறனாளிகள் பேரணி ஊர்வலம் நடத்தப்பட்டது. பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணியை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.