மும்பை ஆரே வனப்பகுதியில் மெட்ரோ நிலைய வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக 2,700 மரங்களை வெட்டுவதற்கு மும்பை மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் வயது முதிர்ந்த பல்வகை மரங்களை வெட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு மும்பை திரையுலக பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்தனர். மரங்கள் சில வெட்டப்பட்ட நிலையில் மக்கள் சாத்வீக போராட்டத்தை தொடர்ந்தனர் .இதையடுத்து உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இதை வழக்காக எடுத்தது.
இன்று அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தீர்ப்பை தொடர்ந்து இனி மரங்களை வெட்ட மாட்டோம் என்று மகாராஷ்டிர அரசு உறுதி அளித்துள்ளது.













