சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் ஊருக்கு அருகில் புதிதாக கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து நேரிடவும், மாசு அதிகரிக்கவும், நீர் நிலைகள் பாழ்படவும் வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

அவர்கள் அளித்த மனுக்களுக்கு எந்த பலனும் இல்லாத நிலையில், இன்று சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்திற்குள் சென்று அதை முற்றுகையிட்டு, உட்புகுந்து போராட்டம் நடத்தினர். கல்குவாரியை தடுத்து நிறுத்தாவிட்டால் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைக்கவும் தீர்மானித்துள்ளனர்.









