முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக திகழ்ந்தவர் ஓபிஎஸ். தற்போது அரசியல் சூழல் காரணமாக துணை முதல்வராக இருந்து வருகிறார். ஆனாலும் முடிவெடுக்க முடியாத இரண்டாமிடம் அவருக்கு உறுத்தலாகவே உள்ளது.
அதற்கேற்ப, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனிப் பெரும் தலைவராக உருவெடுத்து வருகிறார்.
எனவே, மத்திய அரசின் மைய விசையில் சுழன்று தன் மகன் மூலம் தக்க இடத்தை தக்கவைக்க முயன்று வருகிறார்.
இதை அறிந்தே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்போது முதல்வர் பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். ஆனால் துணை முதல்வர் ஓபிஎஸ் வரவில்லை.
இது அதிமுக தொண்டர்களிடையே மட்டுமல்ல ,அரசியல் நோக்கர்கள் இடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.