தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த சண்முக செல்வி (48), இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 4) மதியம் சண்முக செல்வி கடையில் இருந்தபோது ஒரு வாலிபர் பிஸ்கட் கேட்டார்.
இவர் பிஸ்கட் பாக்கெட் எடுத்து கொடுக்கும்போது, திடீரென அந்த வாலிபர் சண்முக செல்வி கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினை பறித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.









