தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் கடலில் குளித்த இளம்பெண் ரேகாவும், சிறுமி ஹெர்மலினும் நீரில் மூழ்கினர். இதில் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ரேகா இறந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ரேகாவின் சிற்றப்பாவான ராபின்சன், தனது குழந்தை உட்பட 7 பேருடன் ஊர் ஓரக் காயலில் குளிக்க அழைத்துச்சென்ற நிலையில் இந்த விபரீதம் நடந்துள்ளது. பௌர்ணமி ஓதம் காரணமாக கடல் நீரேற்றத்தால் நீர்மட்டம் உயர்ந்ததால் பிள்ளைகள் சிக்கியுள்ளனர். 3 பேரை ராபின்சன் மீட்டுள்ளார்.








