நாகர்கோவில் – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு வேலையை தொடங்க மார்த்தாண்டத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மார்த்தாண்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மோகன் குமார் கூறுகையில், ‘என்.ஹெச்47 ஒன்றிய (தேசிய)நெடுஞ்சாலையை 14.75 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பதற்கான அடித்தள வேலை ( பேட்ச் ஒர்க் )தொடங்கியுள்ளது. ஆனால் அதற்கு முன்பு கழிவு நீர் ஓடை மற்றும் மழைநீர் ஓடையை சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் கடைகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது” என்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளி மார்த்தாண்ட மக்களிடையே விழிப்புணர்வு பேச்சை உருவாக்கியுள்ளது.









