ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கடைசிப் போட்டியாக ஈட்டி எறிதல் அமைந்தது. இதன் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டர் எறிந்து தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.
மில்கா சிங்,பி.டி.உஷா போன்ற ஜாம்பவான்கள் சாதிக்காததை நீரஜ் சோப்ரா சாதித்தார்.
இதனால் இந்தியா பதக்கப்பட்டியலில் 47-வது இடத்திற்கு முன்னேறியது.
ஒலிம்பிக் அரங்கில் 4,744 நாட்களுக்குப் பிறகு இந்திய தேசிய கீதம் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.