பொள்ளாச்சி அருகே உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை, இவரது மகள் சிவசுந்தரி பொள்ளாச்சி அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார், இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த சிவசுந்தரிக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் வகுப்பறைக்கு சென்றார் வகுப்பறைக்கு சென்று சிலபணி நேரத்தில் மாணவி சிவசுந்தரி திடீரென மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது.
அங்கிருந்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் சிவசுந்தரியை மீட்டு நெகமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி சிவசுந்தரி உயிரிழந்துள்ளார் இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற நெகமம் காவல்துறையினர் மாணவி உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
.