தென்னாடு செய்தி எதிரொலி : நெடுஞ்சாலை பலகை நிறுத்தம்

0
631

ஆழ்வார் திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் செம்பூர் விலக்கருகே நெடுஞ்சாலை துறையினரால் நடப்பட்ட பெரிய விழிப்புணர்வு விளம்பரப் பலகை உள்ளது.

.கடந்த‌ மாதம் ஏற்பட்ட கனமழையால் விளம்பரப் பலகையை தாங்கிய இரு இரும்புத்தூண்களும் சரிந்து காணப்படுகிறது. எந்நேரமும் அவ்வழியாகச் செல்லும் வாகனத்தின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்த தயாராக இருந்தது .

இது குறித்து நம்முடைய தென்னாடு டாட் காமில் செய்தி வெளியிட்டதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் அந்த பலகையை சரியாக நட்டு பராமரித்துள்ளனர். நெடுஞ்சாலை துறைக்கு தென்னாடு செய்தி குழுமம் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here