சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வீரபாண்டியன் பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே ஆன்லைனில் ஃப்ரீ பயர் கேம் குரூப் மேட்ச் நடந்துள்ளது .இதில் அம்பலசேரி சேர்ந்த இளைஞர்கள் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தோல்வியடைந்த வீரபாண்டியன் பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாசரேத் அருகே உள்ள பிள்ளையன் மனையைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிள்ளையன் மனையைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் ஒன்று சேர்ந்து வந்து அம்பலசேரியை சேர்ந்த இளைஞர்களை தாக்கியுள்ளனர். அவர்களில் ஒருவரின் செல்போனை உடைத்துள்ளனர். இதை தடுத்த இரு பெண்களையும் செங்கல்லை வீசியும், கம்பால் அடித்தும் காயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து கோவில் மணியை அடித்து பொதுமக்கள் ஒன்று திரண்டு பிள்ளையன்மனை இளைஞர்களை விரட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட 3 பேர் காயமைடைந்துள்ளனர். தாக்குதல் குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.








