சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலைக்கு பெண்களை அழைத்துச் சென்ற கத்தோலிக்க அருட் சகோதரிகள் பிரித்தி மேரி வந்தனா பிரான்சிஸ் மற்றும் ஒருவரை பிள்ளைகளை கடத்துவதாக கூறி கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் எதிர்ப்பு காரணமாக நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர்.
அவர்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி நாசரேத் பேருந்து நிலையம் முன்பு துரை குடியிருப்பு பங்குத்தந்தை ஜெரால்டுரவி தலைமையில் ரோமன் கத்தோலிக்க மற்றும் தென்னிந்திய திருச்சபை கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், பிரகாசபுரம் பங்குத்தந்தை அமல்ராஜ், நாசரேத் பேராலயத்தின் தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம் உதவி குரு தனசேகர் ராஜா மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய போதகர் ஞான சிங் எட்வின். பிரகாசபுரம் சேகர குரு நவராஜ் தென்மண்டல பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரான்ஸிஸ் தென்மண்டல கலப்பை இதழ் ஆசிரியர் அருட்திரு செல்வரத்தினம். ஆகியோர் பேசினார். நாசரேத், தோப்பூர், மாதாவனம்,. கந்தசாமி புரம், உடையார் குளம், .பிரகாசபுரம், மூக்குப்பீறியை சேர்ந்த இரு சபைகளின் மக்களும் கலந்து கொண்டனர்.







