கருப்பு பூஞ்சையை விட கொடிய பச்சை பூஞ்சை ம.பி.யில் கண்டுபிடிப்பு

0
1179

கொரோனாவின் இலவச இணைப்பு போல் கருப்பு பூஞ்சை நோய்கள் நோயாளிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தின. ஆனால், அது ஏற்கனவே உள்ள நோய்தான் என்று சுகாதார ஆய்வாளர்கள் கூறினார். கருப்பு, வெள்ளை, மஞ்சள் என்று தொடர்ந்து பல வண்ணங்களில் வந்த பூஞ்சை நோய்கள், கண், மூக்கு , முகம், நுரையீரல் யாவற்றையும் பாதிப்படையச்செய்தன.

இப்போது அந்த வண்ண பூஞ்சை நோய்களை விஞ்சும் வகையில் புதிய பூஞ்சை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள அரபிந்தோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 35 வயது நபருக்கு நுரையீரல் 90 5 பழுதடைந்தது. நன்றாக பரிசோதித்தபோது அவர் பச்சை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவரை மும்பை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here