தூத்துக்குடி உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.8200

0
535

 

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா்கள் சங்கத்திற்கும் அனைத்து உப்பளத் தொழிலாளா்கள் சங்க பிரதிநிகளுக்கும் இடையே 2019ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் பேச்சவாா்த்தை நடைபெற்றது.

உப்பு உற்பத்தியாளா்கள் சங்க செயலாளா் தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தையில் ஆண்டில் குறைந்த பட்சம் முழு அளவுக்கு வேலைக்கு வந்த ஆண் தொழிலாளிக்கு தீபாவளி போனஸ் ரூ.4600, 10நாள் விடுறை சம்பளம்ரூ.3400, கண்ணாடி செருப்புக்கு ரூ.200 என  மொத்தம்.ரூ.8200ம்,

பெண் தொழிலாளிக்கு போனஸ்.ரூ.4275ம.10நாள் விடுமுறை சம்பளம் ரூ.3300, கண்ணாடி செருப்புக்கு.ரூ.200 என  மொத்தம் ரூ.7775ம் வழங்க
ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த போனஸ் 23-10-2019 தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here