மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவேந்திர பட்நாவிசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். நவம்பர் 11ஆம்தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தெரிவித்துள்ளார்.
ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மையான 105 இடங்களில் பாஜக வென்றுள்ளது. சுயேட்சைகள் சிலரின் ஆதரவும் உள்ளது. சிவசேனா இன்னும் பிணக்கு காட்டுவதால் சிக்கல் நீடிக்கிறது. ஆனாலும், இடையில் ஒரு நாள் இருக்கிறது. சிவசேனாவுக்கும் பிரியமான நிதின் கட்கரி சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பதால் சுமூக ஏற்பாடு எட்டப்படும் என நம்பப்படுகிறது.













