தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.கடந்த வாரத்தில் இடைத் தரகர்கள் மூலம் பத்திர பதிவு செய்யும் காட்சிகள் சமூக வலைதள ங்களில் பரவியது மேலும் தீபாவாளி பண்டிகையை என்பதால் அதிகாரிகள் பரிசு பொருட்கள் மற்றம் பணம் எதும் வாங்குகிறார் களா என லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையிட்டு வருகின்றனர். மாலையில் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டு சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது வெளியே ஒருவர் மட்டும் சென்று விட்டார்.
அவ்வாறு சென்றவர் கணக்கிலிருந்து சார் பதிவாளர் முருகனுக்கு 64 ஆயிரம் ரூபாய் ஜி பே மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு கணக்கு காட்டப்படவில்லை. மேலும் சோதனை நடக்கிறது..









