இன்று பெண் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பண மோசடி தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அப்போது அந்த பெண், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் உத்திரபிரேதசம் மாநில கல்வித்துறையில் உதவி செயலாளராக இருப்பதாகவும், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணம் வாங்கி கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த மங்கையற்கரசி (44) என்பதும் கல்வித்துறை உதவி செயலாளர் போல் ஆள்மாறாட்டம் செய்ததும் தெரிய வந்தது.
இதை எடுத்து அவரையும், அவருடன் உடந்தையாக வந்த தாழையூத்து பகுதியை சேர்ந்த ரூபிநாத் (43) சிப்காட் போலீசார் கைது செய்தனர்.








