பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரிடம் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக பெற்றோர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
பெற்றோர் இது குறித்து தலைமை ஆசிரியர் சாத்ராக் ஞான தாசனிடம் முறையிட்டனர். , தலைமை ஆசிரியர் பெற்றோர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார். மேலும்,’ விடுதியில் படித்த மாணவர்களை ‘ தண்டம் ‘ என்று திட்டியதால் இவ்வித புகார் கூறியதாகவும், ஆனாலும் இரு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து விட்டதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
ஆனாலும், இன்று காலையிலிருந்து காவல்துறை அதிகாரிகளும் கல்வி அதிகாரிகளும் ஆசிரியர்களான ராபர்ட், நெல்சன், மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகம் ராபர்ட்டை நிரந்தரபணி நீக்கமும், நெல்சனை தற்காலிக பணி நீக்கமும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.









