திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

0
602

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் இன்று அமாவாசைக்கு மறுதினம் என்பதால் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது.

தொடர்ந்து சிறிது நேரத்தில் கடல் மீண்டும் சீரானது. இதனால் கடலில் குளிப்பதற்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் தயங்கியவாறு காணப்பட்டனர்.

மேலும் இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில் இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வு தான் எனவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here