இடைத் தேர்தல் அறிவிப்பு வந்ததுமே திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் களம் இறங்க தயாராகி விட்டன .அதிமுக கூட்டணியில் இரு தொகுதிகளிலும் அதிமுக வுக்கு என்று முடிவாகி விட்டதால் ‘விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு வழங்கலாம்” என அ.தி.மு.க. தலைமை உடனே அறிவித்துவிட்டது. நாளை காலை 10 மணி முதல் நாளை மறுநாள் மாலை 3 மணி வரை விருப்ப மனு வழங்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
திமுக சார்பில் ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப். 23-ம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் ‘ என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.














