ஆழ்வார்திருநகரியில் பலே திருடர்கள் கைது

0
146

தூத்துக்குடி மாவட்டம்  ஆழ்வார்திருநகரி வடம்போகி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (51) என்பவர் கடந்த 03.08.2024 அன்று அவரது வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளையும், அதேபோன்று கடந்த 06.08.2024 அன்று ஆழ்வார்திருநகரி மணல்குண்டு பகுதியைச் சேர்ந்த சந்தனகுமார் மகன் பாண்டித்துரை (31) என்பவர் அவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மேற்படி திருட்டு சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார் திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஸ்ரீரங்கம் மகன் அம்மாமுத்து (25) மற்றும் தளவாய் மகன் ராமலிங்கம் (எ) ரமேஷ் (25) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி சிவசுப்பிரமணியனின் இரண்டு ஆடுகள் மற்றும் பாண்டிதுரையின் இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் அம்மாமுத்து மற்றும் ராமலிங்கம் (எ) ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஆடு திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் திருடப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here