சாத்தான்குளத்தில் மர்ம உடல் கிடந்த விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீசார்..!

0
1172

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் நவமுதலூர் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (84). இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது முதலூரில் உள்ள மகள் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 22ஆம்தேதி வேளாங்கன்னிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லையாம். அவர் எங்கு சென்றார் எனவும், தடுமாறி வேறு பகுதிக்கு சென்றுவிட்டாரா என்பதும் தெரியவில்லை.


இதுகுறித்து அவரது பேரன் அண்டோ அருண் ரஞ்சித் தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அனிதா வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்த நிலையில் சாத்தான்குளம் கரையடி சுவாமி திருக்கோவில் எதிரே உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் இறந்து 10 நாட்களுக்கு மேல் ஆன பேண்ட், சட்டை அணிந்து இருந்த நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் பிரான்சிஸ் என்பது தெரிய வந்துள்ளது. இவர் வேளாங்கண்ணிக்கு செல்வதாக கூறி இந்த காட்டுப்பகுதிக்கு எப்படி வந்தார். எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here