கோவில்பட்டி அருகே பஸ் – லாரி மோதல் – 8 பேர் காயம்

0
618

இன்று காலை மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்தது. கன்னியாகுமரி குளிச்ச விளையைச் சேர்ந்த எட்வின் குமார் பஸ்சை ஒட்டி வந்தார்.

கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி மேம்பாலத்திற்கு மேலே பேருந்தை ஓட்டி வந்த பொழுது முன்னால் இரும்பு கம்பி ஏற்றி சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதியதில்

பேருந்தின் டிரைவர் எட்வின்குமார், பேருந்தின் முன்பக்கத்தில் இருந்த திருநெல்வேலி ஹரிகேசவநல்லூரை சேர்ந்த லாரி டிரைவர் மணிசங்கர், பாளையங்கோட்டை ஜெகநாதன்,பெருமாள்புரத்தைச் சேர்ந்த ஜோஸ், வி எம் சத்திரத்தைச் சேர்ந்த சதீஷ், கழுகு மலையைச் சேர்ந்த அபிநயா, மலர்க்கொடி, புதுக்கோட்டை கீரனூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி, தஞ்சாவூர் கணபதி நகரைச் சேர்ந்த சந்தனவியாகப்பன் ஆகியோர் ,காயம் ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here