அதிகாரிகளின் அலட்சியத்தால் மின் கம்பி அறுந்து விழுந்து முதியவர் பலி

0
566

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பால்குடம் அக்னிச்சட்டி விழா நடைபெற்றது.சோழவந்தான் மந்தை களத்திவ் பூக்குழி திருவிழா நடைபெற்று வரும் வேளையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பூக்குழி நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த

இடத்திற்கு அருகிலேயே மின்சார கம்பி அறுந்து விழுந்து ஒருவர் இன்று பலியானார்.

இது குறித்து தகவல் அளித்தும் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை மின்சாரத்தை தடை செய்யவில்லை. மழை பெய்து கொண்டு இருந்ததால் இறந்து கிடந்தவர் உடல் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நீரில் நனைந்து கிடந்தது. ஈரத்தில் மின்சாரம் பரவும் என்பதால் பெரும் அச்சத்தில் பொதுமக்கள் பக்தர்கள் தவித்தனர்.

இறந்துகிடந்த முதியவர் சந்திரனின் பிணத்தை அப்புறப்படுத்த சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எந்த ஒரு ஆம்புலன்சும் வரவில்லை.

இந்தப் பகுதியில் அடிக்கடி மின் கம்பம் அறுந்து விழும்.சூழ்நிலையில் இது குறித்து மின்சாரத் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மின்சாரத் துறையின் குளறுபடியால் மனித உயிர் பலியானதால் மின்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என

கேட்டுக் கொண்டனர்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here