தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கோவிலில் சாமக்கொடை நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆகியவை நடந்தது. தொடர்ந்து வில்லுப்பாட்டு, அம்மன் தாலாட்டு ஆகியவை நடந்தது. தொடர்ந்து கும்மியடித்தல், முளைப்பாரி ஊர்வலம் ஆகியவை நடந்தது. நள்ளிரவில் பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது. இதில் சாமியாடிகள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். இதில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.









