தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆனது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பிரசித்தி பெற்ற ஒரு அணைக்கட்டு ஆகும். இந்த அணைக்கட்டில் இருந்து வருடத்திற்கு மழைக் காலங்களில் மட்டும் சுமார் 50,000 முதல் 1,00,000 வரை கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அணைக்கட்டில் மதகுப்பகுதியில் தேங்கிய மணலை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.









