தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிம் ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

0
790

உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்த திருத் தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி:

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோயில்கள் சொந்தமான ரூபாய் 500 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் திருத்தொண்டர்கள் சபை ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவின் அடிப்படையில் கள ஆய்வு செய்வதற்கு கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனடிப்படையில் இன்று தூத்துக்குடி நகரில் ராதாகிருஷ்ணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் கோவில் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில்
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்கள் சொந்தமான சொத்துக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ய பட்டுள்ளது மீட்பதற்கு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி நகரில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் நிலமானது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், அதற்கு அடுத்தாற்போல் இருக்கக்கூடிய சித்தி விநாயகர் கோயில்களுக்கு எழுதி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களாகும் சட்டவிரோதமாக இந்த நிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது

இதன்பேரில் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சொத்துக்கள் அனைத்தும் மீட்க படும்.
இதனுடை மதிப்பு சுமார் 100 கோடியாகும் 1ஏக்கர் ஆகும்..

தமிழ்நாடு முழுக்க இருக்க கூடிய கோயில் செத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விடப்பட்டுள்ளது ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் 4.78 லட்சம் ஏக்கர் நிலம் சொல்லி இருக்காங்க நம்ம ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் 47,000 ஏக்கர் நிலங்கள் காணப்படவில்லை என அறிக்கை தாக்கல் செய்திருக்கோம் இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கோயில் இடம் பத்து லஆயிரம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட வேண்டியுள்ளது.

இந்த இடங்கள் கண்டறியப்பட்டு மீட்கபட்டால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய கூடிய அளவுக்கு அறநிலை துறைக்கு உபரி நிதி அதிகளவில் கிடைக்கும் .
பல இடங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளன அதற்கு காரணமான அனைத்து அலுவலர்களும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கபடும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் மீட்கப்பட வேண்டிய போயில் இடங்கள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இருக்கிறது

மேலும் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் அதிகமானவை இறந்து போனவர்களுடைய பெயர் தான் இருக்குது இதில் முறைப் படுத்தப் படும் இந்த ஆய்வு குறித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கபடும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here