கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணா நகரில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது இதில் கணிதவியல் துறை தலைவராக இருப்பவர் சிவசங்கரன். இவரை நேற்று காலை கல்லூரி வளாகத்தில் ஐந்து ஆறு மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பேராசிரியர் சிவசங்கரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிவசங்கரன் ஹோமோசெக்ஸ் பிரியர் என்றும், ஒரு மாணவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் அவரது நண்பர்கள் தாக்கியதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

அதேவேளையில் கல்லூரியில் பயிலும் கயத்தாறு மாணவர் ஒருவர் எட்டயபுரத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததாகவும், அதை அதை பேராசிரியர் சிவசங்கரன் கண்டித்ததால் மாணவனின் நண்பர்கள் அவரை தாக்கியதாகவும் அவர் தரப்பில் கூறப்படுகிறது.
இதில் எது உண்மை என்பது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே கல்லூரி கல்வி இயக்குனரகம் பேராசிரியர் சிவசங்கரனை சஸ்பெண்ட் செய்துள்ளது. அதே போல் இளங்கலை மூன்றாம் ஆண்டு கணிதம் மற்றும் தமிழ் பயிலும் சிவன் சங்கர் ராம், சுரேஷ் ஆகிய இரு கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.