பாவம் வினேஷ் போகத். எந்தப் பக்கம் போனாலும் நல்வாய்ப்பு ( அதிர்ஷ்டம்)இல்லாதவராகவே உள்ளார் 100 கிராம் எடை அதிகம் காரணமாக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். இப்போது நாலு நாட்கள் குறைவு காரணமாக எம்பி பதவியை இழக்கப் போகிறார்.
ஆம், ஒலிம்பிக்கல் ஏற்பட்ட தடங்கலால் வினேஷ் போகத் வேதனையை வெளிப்படுத்திய போது, அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக மாநிலங்களவை எம்பி ஆக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்தது.
அக்கட்சியின் முக்கிய தலைவரும், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹுடா, தங்கள் மாநிலத்தில் இருந்து அவரை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க விரும்புவதாக தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினராக 30 வயது தேவை. வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வினேஷ் போகத்துக்கு 30 வயது ஆகிறது. எம்பி தேர்தலும் செப்டம்பரில் தான் நடக்கப் போகிறது ஆனால் பாருங்கள் அதிர்ஷ்டக் குறைபாட்டை!, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 21.
நல்வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கு நாலு பக்கமும் கதவடைப்புதான் போலும்!