ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த மூதாட்டி ஒருவர் ரேஷன் கார்டு தொடர்பாக மனு கொடுக்க வந்திருந்தார்.
அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மூதாட்டிக்காக போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு வந்து உதவி செய்தனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சக அதிகாரிகள் பாராட்டினர்.