தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 16.08.2024-ம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்கிறார்கள்.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இம்முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பப் படிவங்களை பெற்று முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் விண்ணப்பித்து, தகுதியின் அடிப்படையில் தொழில் அபிவிருத்திக்கு கடன் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கேட்டுக் கொண்டுள்ளார்.