தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுடலை என்பவரது மனைவி மாரியம்மாள் (28). நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது தாயார் வீடு கடையத்தில் உள்ளது.
அங்கு செல்வதற்காக திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்த அவர் கடையம் செல்லும் ரயிலில் ஏற முயல நடைமேடையில் வைத்தே திடீரென பிரசவ வலி ஏற்படவே இதைப் பார்த்த பிற பயணிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் ஜெயபால், எஸ்ஐ., ஜூலியட், தலைமை காவலர் ராதா உள்ளிட்ட குழுவினர் அங்கு வருதற்குள் மாரியம்மாளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அங்கேயே வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தாயும் சேயும் பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்









