கோவில்பட்டியைச் சேர்ந்த சிலர் ஒரு சுற்றுலா பேருந்தில் நேற்று தவெக மாநாட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோவில்பட்டி முத்தலாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாடசாமி(43) பேருந்தை ஓட்டி வந்தார் .
சாத்தூர். ஓடைப்பட்டி அருகே இன்று காலை 11 மணி அளவில் சுற்றுலா பேருந்தின் டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. ஒரு பெண் சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவில்பட்டி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயம் அடைந்த 11 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த சாத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.