நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள பீக்கிலிபட்டி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (43) என்பவர் கூலி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.









