தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள துவரங்குளம் கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக தார் சாலை பழுதடைந்து சாலையே இல்லாத நிலையில் காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல் போனிபாஸ் தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு அளித்த புகார் மனுவின் பெயரில் 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது.








