தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.