மதுரையில் வீட்டு கதவை உடைத்து 40 பவுன் நகை ரூ.20 லட்சம் கொள்ளை

0
391

மதுரை வசந்த நகர் பகுதியை சேர்ந்த சீனிவாச சங்கர நாராயணன் ( 55). கேட்டரிங் சர்வீஸ் தொழில் நடத்திவருகிறார்.
இவர், கடந்த ஜூலை 2ஆம் தேதி உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் திருச்சி சென்றார். நேற்றிரவு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் ,வீட்டின் உள்ள இருந்த லாக்கர் திறக்கப்பட்டு சுமார் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 லட்சம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து மதுரை சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடப்பதற்கு முன் திருடர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கவிழ்ந்து வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here