வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

0
1289

ஆலங்குளத்தை சேர்ந்தவர் சாமுவேல், விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ஐசக் ஷாம்(வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு தனது பைக்கில் செல்வது வழக்கம். இன்றும் வழக்கம் போல கல்லூரிக்கு அத்தியூத்து மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆலங்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் பள்ளி வேன் ஐசக் ஷாம் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஐசக் ஷாம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த ஆலங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக முத்துகிருஷ்ணாபேரி வடக்கு தெருவை சேர்ந்த வேன் டிரைவர் ராசாமணி மகன் செல்வம் என்பவரை கைது செய்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here