டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக கட்டப்பட்டுள்ள 36 புதிய வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பில் புதிய உறுப்பினர்கள் தங்குவதற்கு இடவசதி குறைவாகவே உள்ளது. ஏற்கனவே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவி காலம் முடிந்து காலி செய்த சென்ற பின்னர்தான் புதியவர்களுக்கு குடியிருப்பு அளிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
எனவே, டெல்லி நார்த் அவன்யூ சாலையில் காவல் நிலையத்திற்கு அருகே பழைய வீடுகளுக்கு பதிலான புத்தம் புதிய 36 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில் அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
புதிய வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். சவுத் அவன்யூ சாலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடு கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.