தாமிரபரணி கரையோரம் தண்ணீர் விற்கக் கூடாது பேரூராட்சிக்கு பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை

0
561


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாமிரபரணி மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயக்கப் பொதுச் செயலாளர்
இதழாளர் அய்கோ
ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
மாவட்டப்பொறுப்பாளர்கள் ஜெயபாலன், இரவீந்திரன், பூபாலன் முன்னிலை வகித்தனர். சிறப்பு கருத்தாளர் வியனரசு ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்
கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில், தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள்
மணிவண்ணன் சாந்தா ரோஸ், மகேஷ், வரதை செல்வம்,ஓவியர் செல்வம், ஆசிரியர் ஜெயராஜ், கிருஷ்ணன், ஜெலின், பொன்ராணி,,செல்வி, ஒன்றிய கவுன்சிலர் பாரத்,

நம்பியாறு பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள் சிலுவை பிரகாசம், மருத்துவர் கார்த்தீசன், வள்ளியூர் மாறன், மருதூர் மணிமாறன், கருமேனி ஆறு பாதுகாப்பு குழு தலைவர் கணேசன், விவசாயிகள் சங்க பொறுப்பாளர் ராஜா ராம், கருமேனியாறு பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் இசக்கிமுத்து, உடன்குடி தாங்கை குளம் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜெயக்குமார்,

வழக்குரைஞர்,முத்துப்பாண்டி, இயக்க வள்ளிநாயகம், நெப்போலியன் சுப்பையா, பால் அண்ணாதுரை, இராசேசு, டேனியல் ஆப்ரஹாம், சிவலூர் ஜெயராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்,
ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சாய்க்கடை கழிவு நீரை ஆற்றுக்குள் விடக்கூடாது ,வாழவல்லான் நீரேற்று நிலைய தண்ணீர் தொட்டியின் அழலை அகற்றி பொது மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும்.

கல்லிடைக்குறிச்சியில் தண்ணீருக்கு மீட்டர் பொருத்தும் அம்ருத் 2.0 திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, தாமிரபரணி கரையோர பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தண்ணீரை விலைக்கு விற்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தக் கூடாது.

தூத்துக்குடி ஆலைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் எடுக்காமல், புன்னைக்காயல் அணையில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டும்,

நெல்லை மாநகராட்சி ஆற்றுக்குள் அமைத்திருக்கும் கழிவுநீர் கட்டமைப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், வனத்துறையை ஆற்றில் இருந்து வெளியேற்ற வேண்டும்,

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரி அதில் கிடைக்கும் மணலை ஆற்றுக்குள்ளேயே விட வேண்டும்,2010ல் உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த உத்தரவுப்படி தாமிரபரணியை பாதுகாக்க மாவட்ட, வட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here