தாமிரபரணியில் பிடிமண் எடுத்து தாசில்தார் அலுவலகத்தில் உறுதிமொழி

0
561

தாமிரபரணி ஆற்றில் உள்ள செங்கல் சூளை, ஆலை, குடியிருப்பு பன்றி குடில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆற்றுக்குள் சாக்கடை கலப்பதை நிறுத்த வேண்டும், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுப்பது கட்டுப்படுத்த வேண்டும்,

மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும், 2010ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி தாமிரபரணி பாயும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் இதழாளர் அய்கோ தலைமையில் ஸ்ரீவைகுண்டத்தில் ஆற்றுக்குள் இறங்கி பிடி மணல் எடுத்து, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தாமிரபரணி பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தனர், பின்னர், வட்டாட்சியர் சிவகுமாரிடம் தங்கள் கோரிக்கைகளை விளக்கிக் கூறினர்..

இதில், இயக்க கருத்தாளர்கள் வியனரசு, புதுக்குடி ராஜா, காஜா முகைதீன், அபூபக்கர் சித்திக், முகமது யாசின் ( எஸ் டி பி ஐ ), வள்ளிநாயகம் (பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர்), ஆத்திப் பாண்டி (மாவட்ட தேமுதிக பொருளாளர்), பேராசிரியை பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி (ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம்), மணிமாறன் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்), நெகேமியா (நெல்லை மாநகர வர்த்தக காங்கிரஸ் ), குயிலி நாச்சியார், கலுங்குவிளை சௌந்தர் திருச்செல்வம், பால் அண்ணாதுரை, பீட்டர், விளாத்திகுளம் காளிதாஸ், ஆதிநாராயணன்,

விவசாய சங்கம் லூர்து மணி, வரதை செல்வம், பெட்டைக் குளம் மூர்த்தி, இசக்கி முத்து வேதாந்தம், ஆத்தூர் ஜாகிர் உசேன், ராஜு,, ராஜேஸ்வரன் புரட்சி வேந்தர், அரபத் அலி அஷ்ரப் அலி, ஏர் வளவன், டோரா, ஜெலின்,அருள்ராஜ், டேனியல், பொன்ராணி, அம்ஜத், அபூ ஹூவைஸ், அந்திரேயா, ஜெகன், கோரம்பள்ளம் பாலு, அகஸ்டின் ஜான் ராஜா, எப்சலின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்(திருந்தனர்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், திருச்செந்தூர் டி எஸ் பி, ஆகியோர் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய போலீஸ் படை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here