இணையத்தை கலக்கும் கடல் இளவரசி; விதம்விதமான மீன்ஊறுகாய் தொழிலும் செய்து அசத்தி வரும் 22 வயதேயாகும் மீனவ பொண்ணு சுபிக்ஷா; பெண்கள் வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என பெண்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இளம் பெண்ணுடன்; ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் ஓர் விசிட்….!
தூத்துக்குடி, குலேசகரன்பட்டினம் அருகே உள்ள பெரியதாழை என்ற மீனவ கிராமத்தில் 22 வயதேயாகும் மீனவ பொண்ணு சுபிக்ஷா கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மையே’ தூத்துக்குடி மாவட்டம், குலேசகரன்பட்டினம் அருகே உள்ளது பெரியதாழை என்ற மீனவ கிராமம், இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோர் நாட்டு படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.. ஆண்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன்பிடித்து கொண்டு வந்த நிலை நீங்கி தற்போது சாதிக்க வேண்டும், முன்னேற்றம் அடைய வேண்டும், என கருதி பல்வேறு இன்னல்கள், தடைகளை தாண்டி கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார் சுபிக்ஷா, இவரின் தந்தை குமார் மற்றும் தம்பி லியாண்டர்
மகிபா ஆகியோரின் உதவியுடன் கடல் தொழில் செய்து வரும் சுபிக்ஷா-வை அவரின் சொந்த ஊரான பெரியதாழை கிராமத்தில் சந்தித்தோம்… பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கடந்து வந்த பாதை குறித்தும், அவரின் ஊறுகாய் தொழில் முன்னேற்றம் குறித்தும் விளக்குகிறார்.
இது குறித்து சுபிக்ஷா மனம் திறக்கையில், தூத்துக்குடியில் உள்ள ஓர் மகளிர் கல்லூரியில் பி.ஏ இங்கிலீஷ் படிச்சிருக்கேன்.. கல்லூரி படிப்பை முடித்து விட்டு வாழ்க்கையில் என்ன செய்வதேன சிந்தித்து கொண்டிருக்கும் போது தான், அப்பா கூட கடல் தொழிலுக்கு போக ஆசைப்பட்டேன்.. தமிழகத்தில் கடல் தொழில் போகும் இளம் பெண் நான் என்றால் எனக்கு மிகவும் பெருமையாக தான் உள்ளது… ஆனால் அது எளிதில் கிடைத்துவிடவில்லை.. அதற்கு பின்னால் மிக பெரிய வலிகள் உள்ளன..
முதலில் அப்பா கூட கடலுக்கு வருவேன் என நான் கூறும் போது கூட்டி செல்ல மறுத்தார். அம்மா, அப்பா என்னை ரொம்ப திட்டினார்கள். அக்கம், பக்கத்தினர் என எல்லோரும் என்னை நகைச்சுவையாக எண்ணி கிண்டல் பண்ணினாங்க.. ஆனால் நான் அதனை பெருட்ப்படுத்தவில்லை.. என் தம்பி லியாண்டர்
மகிபா எனக்கு சப்போர்ட்-டாக இருந்தார்.. அதனால் நான் ஒரே குறிக்கோளாக இருந்தேன்.. அப்பாவிடம் கடும் அடம் பிடித்தேன்.. அப்போது அப்பா என்னை சமாதானப்படுத்த உன்னை கடலுக்கு கூப்பிட்டு செல்கிறேன் என கூறி விட்டு, எனக்கு தெரியாமல் கடலுக்கு சென்று விடுவார்..
ஆனால் நான் இரவு கடலுக்கு செல்ல வேண்டும் என்பதால் தூங்கினால் அப்பா கடலுக்கு விட்டு, விட்டு சென்று விடுவாரோ என எண்ணி இரவு நேரங்களில் தூங்காமல் விழிப்புடன் இருப்பேன்… அப்போது தான் அப்பா வேறு வழியின்றி என்னை கடல் தொழிலுக்கு கூட்டி சென்றார்.. அப்போது கூட சரி இன்று ஒரு நாள் வருவாள்.. பார்த்து கொள்ளலாம் என எண்ணினார் அப்பா, ஆனால் அவர் எண்ணத்தை தவிடு போடியாக்கினேன்.. ஆம், கடலுக்குள் முதன் முறையாக சென்றால் அந்த அலை, மற்றும் கடல் உப்பு காற்று சுவாசத்தினால் வாந்தி எடுப்பது வழக்கம், ஆனால் நான் வாந்தி எடுக்கவில்லை.. இது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஆச்சரியம், அதே போன்று அடுத்த நாள் சென்றேன், அதற்கடுத்த நாள் சென்றேன். தற்போது வரை 1 வருட காலமாக சென்று வருகிறேன் கடல் தொழிலுக்கு,
பிறந்தோம், இறந்தோம் என்று இல்லாமல் பிறந்தால் சாதிக்க வேண்டும் என எண்ணினேன்.. அதற்கு பல தடைகளை தாண்ட வேண்டி இருந்தது.. உடல் அளவிலும், மனதளவிலும் பிரச்னை இருந்தது.. இருந்தாலும் அதனை ஒரு ஓரமாக வைத்து கொண்டு உன்னால் முடியும் என்று எனக்கு நானே நம்பிக்கை ஊட்டி இப்போது இந்த நிலையில் உள்ளேன்…
ஆரம்பத்தில் கடல் தொழிலுக்கு செல்லும் போது, குடும்பத்திலும் சரி, சுற்றி உள்ளவர்களும் சரி, என்னையும் அப்பாவையும் திட்டினார்கள்.. பெண் புள்ளைய கடலுக்கு ஏன் கூட்டி செல்கின்றாய்… அவளுக்கு கல்யாணம் செய்து வை என்றார்கள்.. ஆனால் அதை நானும், அப்பாவும் கண்டுகொள்ளவில்லை.. அதன் பின் அப்பா உனக்கு பிடித்ததை செய் மா நான் இருக்கிறேன் என்றார்.. இந்த ஓர் விஷயம் தான் என்னை மேலும் மெறுகேற்றி கொள்ள ஓர் வாய்ப்பு கிடைத்தது… அப்போது தான் மீனில் ஊறுகாய் செய்யலாம் என எண்ணினேன்.. “மீனவ பொண்ணு சுபி” என்ற மீன் ஊறுகாய் பிசினஸ் செய்து கொண்டிருக்கின்றேன்.. ஏழு விதமான மீன் ஊறுகாய் செய்து வருகிறேன்..
வஞ்சரம் ஊறுகாய், சூரை மீன் ஊறுகாய், இறால் மீன் ஊறுகாய், நண்டு ஊறுகாய், கனவா ஊறுகாய் என 7 விதமான ஊறுகாய் செய்து கொடுக்கின்றேன்.. இதில், ஸ்பெஷல் ஊறுகாய் என்றால் கருவாடு தான், கருவாடு ஊறுகாய் என்றால் முள்ளு இருக்கும் என்று நினைக்க வேண்டாம், அப்படியே கடிச்சு சாப்பிடலாம், அந்த அளவுக்கு வேற லெவல் டேஸ்ட் இருக்கும்.. முன்னோர் காலத்தில் செய்த இந்த ஊறுகாய் நாம் எவ்வாறு செய்ய போகிறோம் என எண்ணியுள்ளேன்.. மிக கஷ்டமாகவும், பணமும் நிறைய விரயம் ஆனது.. அதன் பின், படிப்படியாக செய்து தற்போது தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், டெல்லி என வெளிநாடுகளுக்கும் சென்று விட்டது, “மீனவ பொண்ணு சுபி” ஊறுகாய்,
எப்பவுமே ஒர் மன தைரியம் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, பெண்கள் என்றால் படிக்க வேண்டும், கல்லூரி முடிக்க வேண்டும், பின்னர் திருமணம் என்று இருப்பார்கள். அது தவறு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்.. பிறர் போல் இல்லாமல் என்னை போன்று, என்னை பார்த்து பெண்கள் வளர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.. ஏன் என்னை பார்த்து நிறைய பெண்கள் முன்னே வருவார்கள் என்று நம்புவதாகவும் கூறினார் சுபிக்ஷா…..
இதுகுறித்து, சுபிக்ஷாவின் தந்தையும் அவர் வெற்றிக்கு காரணமாகவும் இருந்த அவர் தந்தை குமார் நம்மிடையே பேசினார்.. என் மகள் சுபி கடலுக்கு போக ஆசைப்பட்டார்..அப்போது நான் கூட்டி கொண்டு போக மாட்டேன் என்று கூறுவேன்.. ஆனால் நான் வருவேன் என அடம் பிடித்து வருவாள்.. நானும் சரி என கடலுக்கு கூப்பிட்டு செல்வேன்… அக்கம், பக்கத்தினர் ஏன் பெண் புள்ளைய கடலுக்கு கூட்டி கொண்டு போகிறாய் என்பார்கள்.. ஆனால் சுபி யார் என்ன சொன்னால் என நான் வருவேன் என்று கடலுக்கு வருவாள்.. கிட்டத்தட்ட கடலுக்குள் 10 மைல் தூரம் மீன்பிடிக்க சென்று வருவோம்.. எந்த பிரச்னையும் கிடையாது என்றார்..
பெண்கள் இளம் வயதில் பல்வேறு கனவுகளை லட்சியமாக அடைய வேண்டும் என எண்ணுவது உண்டு, ஆனால் குடும்ப வறுமை நிலை காரணமாகவும், வேறு வலியின்றியும், திருமணம் செய்து கொண்டு அந்த இலக்கினை அடைய முடியாமல் போவார்கள்.. ஆனால் இப்பெண்கள் மத்தியில் சாதிக்க வேண்டும், லட்சியத்தை அடைய வேண்டும் என எண்ணி வேதனைகளை சாதனைகளாக்கி பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒளி விளக்காக திகழ்கிறார் மீனவ பொண்ணு சுபிக்ஷா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை… சுபிக்ஷா-வின் வெற்றியை கண்டு பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் எண்ணமாகவே உள்ளது…








