மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது இதில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இதற்காக சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.குறிப்பாக, பக்தர்கள் கரும்பு தொட்டில் கட்டியும் 21 அடி நீள அழகு குத்தியும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் உருண்டு கொடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்
குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் இருந்த தாய்மார்கள் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை தொட்டிலில் கிடத்தி நான்கு ரத வீதிகளில் வந்து நேர்த்திக்கடனை செலுத்தி செலுத்தினர்.













