திசையன்விளை அருகே உள்ள பெட்டைக் குளத்தில், தூத்துக்குடி மாவட்டம் இடைச்சி விளையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வெடி மருந்து குடோன் உள்ளது. இங்கு வெடி மருந்துகளை இருப்பு வைத்து வெடிகளை தயாரித்து வருகிறார்.
சற்று நேரத்திற்கு முன்பு அந்த வெடி மருந்து குடோனில் ஏற்பட்ட விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள ஜெ ஜெ நகரை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் உடல் கருகி இறந்தார். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

விதிமுறைக்கு மாறாக மருந்து பதுக்கியதால் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து க்யூ பிரான்ச் டி எஸ் பி மகாதேவன், இன்ஸ்பெக்டர் ஆதிஷ், சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் திசையன்விளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.









