கே.ஜி.எப் பட வசனத்திற்கு கத்தியை சுழற்றி வீடியோ பதிவிட்ட இருவர் கைது

0
1234

சென்னை என்.எஸ்.கே நகர் 17 வது தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(26).இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கையில் கத்தியை சுழற்றிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் ரஞ்சித்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் வந்ததால் அவரது நண்பர் அரும்பாக்கம் நெட் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து பிண்ணனியில் கே.ஜி.எப் பட டையலாக்கை பதிவிட்டு அந்த வீடியோவை தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.இதனையடுத்து அமைந்தகரை போலீசாருக்கு இந்த வீடியோ குறித்தான தகவல் கிடைத்ததால் கத்தியை வைத்து சுழற்றிய ரஞ்சித் மற்றும் அதை பதிவிட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here